கோலாலம்பூர்:
முகநூல் மூலமாக அறிமுகமான ஜப்பான் பெண் என்று கூறப்படும் ஒருவரின் காதல் வலையில் சிக்கிய, 58 வயது ஆடவர் ஒருவர் சுமார் RM2 இலட்சம் இழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் கடந்த மாதம் ஜப்பான் பெண்ணுடன் முகநூலில் பழகியதாகவும் துருக்கியிலிருந்து தபால் மூலமாக ஒரு பொருள் ஜப்பானுக்கு அனுப்பவிருப்பதாகவும், அதற்கான வரி பணமாக RM200,000 வேண்டும் எனக் கேட்டதும் குறித்த 58 வயது ஆடவர் அப்பெண்ணுக்கு 50 பரிவர்த்தனைகள் மூலம் மாற்றியதாகவும், முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகப் பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் டத்தோ ஶ்ரீ யஹயா ஒத்மான் தெரிவித்தார்.
மேலும் சம்மந்தப்பட்ட முகநூல் கணக்கு போலியானது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும், குறித்த ஆடவர் பணப்பரிமாற்றம் செய்த ஜப்பான் வங்கிக் கணக்கு தொடர்பில் போலீசார் விசாரணையை நடத்தி வருவதாக அவர் சொன்னார்.
























