கோலாலம்பூர்:
2025/26-ஆம் ஆண்டிற்கான QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில், மலாயா பல்கலைக்கழகம் 80.1 மதிப்பெண்களைப் பெற்று 58-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்தாண்டு இந்தத் தரவரிசையில் அது 60-ஆவது இடத்தில் இருந்தது.
மலேசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக மலாயா பல்கலைக்கழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நிலையில், மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 126-வது இடம்) இரண்டாம் இடத்தில் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் 4,349 மாணவர்கள் வெளிநாட்டு மாணவர்கள்உட்பட மொத்தம் 17,222 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.
இந்நிலையில் ஆசியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் மலாயா பல்கலைக்கழகம் ஆசியளவிலான தரவரிசையில் 16-ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
























