புத்ராஜெயாவில் திமோர் லெஸ்தே அதிபர் டாக்டர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டாவுடனான சந்திப்பின் போது மலேசியா திமோர் லெஸ்தேவுடன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் ஆசியானில் சேருவதற்கான அதன் விருப்பத்தை ஆதரிப்பதகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியாவிற்கும் திமோர் லெஸ்தேவிற்கும் இடையிலான நெருங்கிய உறவின் வெளிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் அவரின் வருகை அமைந்திருந்ததாக அவர் கூறினார். மேலும் நிலைத்தன்மை, பகிரப்பட்ட செழிப்புக்காக வட்டார ஒருங்கிணைப்பு செயல்முறையை ஆதரிப்பதில் மலேசியா தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்கை வகிக்க உறுதி அழித்துள்ளாதகாவும் அவர் கூறினார்.













