வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது

வாஷிங்டன்,கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடி, இந்தியாவில் இருந்து தப்பி இங்கிலாந்துக்கு சென்றார். இதனை தொடர்ந்து மத்திய அரசு அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. பின்னர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர் லண்டனில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக வேண்ட்ஸ்வொர்த் சிறையில் 55 வயதான நீரவ் மோடி, அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு அவரை நாடு கடத்துவதற்கான முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வங்கி மோசடி தொடர்பாக நீரவ் மோடியின் சகோதரர் நேஹால் தீபக் மோடியை கைது செய்ய சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டன. அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டு இருந்தத். இந்த நிலையில்தான், அமெரிக்காவில் நேஹல் மோடி கைது செய்யப்பட்டுள்ளார். நேஹல் மோடியை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அமெரிக்கா கைது செய்துள்ளது. நேஹல் மொடி பெல்ஜியம் நாட்டு குடியுரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here