மலாக்கா,
சேவை வரி மற்றும் அபராதங்களாக மொத்தம் RM139,755.25 தொகையை 2021 முதல் 2023 வரை செலுத்தத் தவறியதற்காக, முன்னாள் இயக்குநரான Ng Wen Hua, (31) மற்றும் அவர் சொந்த நிறுவனமான Go Lounge Sdn Bhd
ற்கு இன்று ஆயர் கெரோஹ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் RM15,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அபராதத்தை செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒரு மாத சிறைதண்டனையும் விதிக்கபப்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளின்படி, சேவை வரி சட்டம் 2018-இன் பிரிவு 26(4)-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்கு உட்பட்டு, சம்பந்தப்பட்ட வரிகளை செலுத்த தவறியுள்ளனர். சம்பந்தப்பட்ட சேவை வரிகள் RM19,000 முதல் RM30,000 வரை இருந்தது, மேலும் அபராதங்கள் RM3,000 முதல் RM12,000 வரை விதிக்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கு, சேவை வரி சட்டம் 2018-இன் பிரிவு 26(8) மற்றும் பிரிவு 78(1)(a)ன் கீழ் தொடரப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் RM50,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.










