(Our Reporter க.கலை)
சிரம்பான்,
நெகிரி செம்பிலான் சீன மகப்பேறு சங்கம் (NSCMA) நடத்தும் சிஎம்எச் நிபுணத்துவ மருத்துவமனை, 2 020ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வரும் நிறுவன மாற்றம் மற்றும் கட்டுமான வளர்ச்சி முயற்சியின் ஒரு முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், மருத்துவமனை புதிய தோற்றத்தில் திகழக் கட்டமைக்கப்பட்டு, 2025ஆம் ஆண்டில் மிகப்பெரிய கட்டுமானத் திட்டத்துடன் முன்னேறியுள்ளது என்று சிம்எம்எச் மருத்துவமனையின் தலைவர் டத்தோஸ்ரீ லீ தியான் ஹோக் கூறினார்.
2020 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் (EGM), உறுப்பினர்களின் ஒப்புதலுடன் மருத்துவமனை நிறுவன முறைப்படி செயல்பட தொடங்கியது. இந்நிலையிலே, 2022 ஜூலை 4ஆம் தேதி, மலேசிய சுகாதார அமைச்சின் அனுமதியுடன், மருத்துவமனையின் செயற்பாட்டு உரிமை CMH Medicare Sdn. Bhd. க்கு மாற்றப்பட்டது. அதன் பின், NSCMA மருத்துவமனை வளாகத்தை மாத வாடகைக்கு வழங்கி, சமூக நலத்திட்டங்களுக்கு மாதம் 100,000 ரிங்கிட் முதல் 200,000 ரிங்கிட் வரையிலான வருவாயை ஈட்டுகின்றது என்று கூறினார்.
2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், மருத்துவமனை வளர்ச்சி திட்டம் இரு கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்டது. முதல் கட்டமாக 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 6 மாடிகள் கொண்ட வாகன நிறுத்துமிட கட்டிடம் மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, அக்டோபரில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டுமானத்திற்கான கடனுக்கு தலைவர் தனிப்பட்ட உத்தரவாதம் அளித்துள்ளதுடன், NSCMA மற்றும் NSCMH ஹோல்டிங்ஸ் நிறுவனங்களும் கூட்டு உத்தரவாதம் அளித்துள்ளன. நிலம் மற்றும் கட்டிடங்கள் அடமானமாக வைக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது என்று டத்தோஸ்ரீ கூறினார்.
இரண்டாம் கட்டமாக, 10 மாடிகள் கொண்ட புதிய மருத்துவக் கட்டடம் மற்றும் பூமிக்கீழ் கார் பார்க்கிங் 2026 மார்சில் தொடங்கி 2029 ஜூனில் நிறைவடையவுள்ளது. இக்கட்டடம் செயல்படத் தொடங்கும் நேரம் 2030 ஜனவரி மாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்திலுள்ள முக்கிய அம்சங்கள், 100 புதிய நோயாளர் படுக்கைகள் (மொத்தம் 166), 16 இல் இருந்து 45 ஆக விரிவாக்கப்படும் நிபுணத்துவ மருத்துவர் கிளினிக்குகள் ஆகியவையாகும் என்று கூறினார்.
இந்த கட்டுமானத்திற்கு தேவையான மொத்த நிதி 120 மில்லியன் ரிங்கிட்டாகவும் இதனுள் 45 மில்லியன் ரிங்கிட் பங்கு விநியோகத்தின் மூலம் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பங்கு விலை 2.50 ரிங்கிட் ஆகும். குறைந்தபட்சம் 100,000 பங்குகள் ஒரு லாட் எனக் கொள்ளப்படும். பங்கு சந்தா காலம் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 6, 2025 வரை நடைபெறும். இதன் மூலம், NSCMH ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.5 மில்லியனில் இருந்து 58 மில்லியனாக உயரும் என்று தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ கூறினார்.
இத்திட்டத்தை முன்னெடுக்க பல நல்லுள்ளங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. முன்னாள் தலைவர் டத்தோஸ் டாக்டர் நெல்லி எஸ்.எல். டான்-வாங் தனது பதவிக் காலத்தில் Block B கட்டடம் மற்றும் நில உரிமையை மருத்துவமனைக்காகப் பெற்றுத் தந்தார். மாட்ரிக்ஸ் கான்செப்ட் குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஹோ கோங் சுன், தனது தந்தையின் நினைவாக 1.2 மில்லியன் ரிங்கிட் நன்கொடை வழங்கினார். அதுபோல், டான் ஸ்ரீ வின்சன்ட் டான் தனது தந்தையின் நினைவாக 3 மில்லியனுடன் டயாலிசிஸ் மையத்தை நன்கொடை வழங்கினார்.
பழைய கட்டிடங்கள் இடிக்கப்படும் முன், அவற்றில் உள்ள நினைவுச் சின்னங்கள் புதிய கட்டிடத்தில் அடையாளமாகக் கொண்டு வரப்படும். 1935ஆம் ஆண்டு கட்டப்பட்ட முக்கியக் கட்டடம் மற்றும் “Tan Lam Hui Dialysis Centre” ஆகியவை புதிய மருத்துவக் கட்டடத்தில் நினைவுப்பலகையுடன் மீண்டும் அமைக்கப்படும்.
இந்த திட்டத்தின் இறுதிக்குறிக்கோள், நல்லாட்சியை நிறுவி, சமூக நலனை மேம்படுத்தும் ஒரு தனியார் மருத்துவ நிறுவனமாக சிஎம்எச் மருத்துவமனையை மாற்றுவதாகும். இது “Doing good while doing well” என்ற கொள்கையின் அடிப்படையில் சமூக நலத்தையும், நிறுவன வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாகும்.
இக்கட்டிடங்கள் முழுமையாக இயங்கத் தொடங்கியதும், NSCMH ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடும் திட்டமும் எதிர்காலத்திற்காக வகுக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களுக்கும், ஆயுள் உறுப்பினர்களுக்கும், மருத்துவர்களுக்கும், ஊழியர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் இந்த வளர்ச்சிக்கு ஆதரவளித்ததற்காக மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் டத்தோஸ்ரீ லீ தியான் ஹோக், புவான் மரியா செங் சுவீ கீ, டத்தோ லோகந்திரன், டத்தோ ஈர் டான் சுவான் சிங், டெஸ்மோன்ட் சோங் கோங் ஹவா, புவான் சுவா சீர் லீ,



















