துபாய்: ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில் இந்திய அணி, ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி பெற்றது. கடைசி வரை போராடி வீழ்ந்தது இலங்கை அணி.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முக்கியத்துவமில்லாத ஆசிய கோப்பை, ‘சூப்பர்-4’ போட்டியில் இந்தியா, இலங்கை மோதின. ஏற்கனவே பைனலுக்கு முன்னேறிய நிலையில், இந்திய அணியில் பும்ரா, ஷிவம் துபேவுக்கு ‘ரெஸ்ட்’ தரப்பட்டது. அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா இடம் பெற்றனர். பைனல் வாய்ப்பை இழந்த இலங்கை அணி, ‘டாஸ்’ வென்று, ‘பவுலிங்’ தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தீக் ஷனா பந்தில் அவரிடமே ‘கேட்ச்’ கொடுத்தார் சுப்மன் கில் (4). வழக்கம் போல அதிரடியாக ரன் சேர்த்த அபிஷேக், 22 பந்தில் அரைசதம் எட்டினார். இது தொடர்ந்து இவர் அடித்த 3வது அரைசதம். மந்தமாக ஆடிய சூர்யகுமார் 12 ரன் எடுத்தார்.
அசலங்கா பந்தில் அபிஷேக் சர்மா (61 ரன், 31 பந்து, 8×4, 2×6, ஸ்டிரைக் ரேட் 196.77) அவுட்டானார். சஞ்சு சாம்சன் 39 ரன் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா (2) நிலைக்கவில்லை. பின் இணைந்த திலக் வர்மா (49*), அக்சர் படேல் (21*) கைகொடுத்தனர். இந்திய அணி 20 ஓவரில் 202/5 ரன் எடுத்தது.
இலங்கை அணிக்கு நிசங்கா, குசல் மெண்டிஸ் (0) ஜோடி துவக்கம் தந்தது. பின் இணைந்த நிசங்கா, குசல் பெரேரா என இருவரும் அரைசதம் கடக்க, 11 ஓவரில் 130/1 ரன் குவித்தது. தவிர ஆசிய ‘டி-20’ல் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் எடுத்த ஜோடி (2வது விக்கெட்டுக்கு 127 ரன்) ஆனது.













