கோலாலம்பூர் :
இஸ்ரேல் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட “குளோபல் சுமூத் ப்ளோட்டில்லா (GSF)” தன்னார்வலர்கள் மலேசியாவுக்கு பாதுகாப்பாக திரும்பிய நிலையில், காசா மக்களுக்கு இரண்டாவது கட்ட மனிதாபிமான உதவி அனுப்ப மலேசியா தயாராக இருப்பதாக அறிவித்தார்.
நேற்று இரவு புக்கிட் ஜாலில் ஆக்சியாதா அரங்கில் நடைபெற்ற “Himpunan Solidariti Bersama Gaza” என்ற பெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
“நாம் தற்போது புதிய திட்டங்களைப் பற்றி எகிப்து அரசாங்கத்துடன் விவாதிக்க உள்ளோம். குறிப்பாக ரஃபா எல்லை வழியாக (Rafah Crossing) மனிதாபிமான உதவியை அனுப்புவதற்கான மாற்று வழிகளை ஆராய உள்ளோம்.”
“பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அமைச்சரவை உறுப்பினர்களுடன் இது தொடர்பில் நான் கலந்துரையாடுவேன். அதன்பின், தேவையானால், எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தாஹ் அல்-சிசியை நேரடியாக தொடர்புகொள்வேன்,” என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
























