ஈப்போ:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 759 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,171 பேர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் மஞ்சுங் மற்றும் லாரூட், மாதாங், செலாமா மாவட்டங்களில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தஞ்சமடைந்துள்ளனர் என மாநில பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.
மஞ்சுங் மாவட்டத்தில் 3 நிவாரண மையங்களும் மற்றும் லாரூட், மாதாங், செலாமா மாவட்டங்களில் 19 மையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளில் கம்போங் சிம்பாங் ஹால்ட், கம்போங் சுங்கை பாரு, கம்போங் சாலக் பாரு, கம்போங் சுங்கை லுபோக், கம்போங் மஸ்ஜிட் , கம்போங் பத்து 8, கம்போங் பத்து 9, கம்போங் உலு செபெத்தாங் ஆகியவை அடங்குகின்றன.
மேலும், தாமான் சிம்பாங் மக்மூர், கம்போங் பாரு சிம்பாங், கம்போங் ஜாவா, கம்போங் கெலுபோங், மற்றும் தாமன் கோத்தா வீரா, தாமான் கமுண்டிங் டியாரா, தாமான் லாரா அமன், தாமான் லாரா டமாய் போன்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மஞ்சங் மாவட்டத்தில், கம்போங் நெலாயான், கம்புங் சுங்கை பத்து, தாமான் பந்தாய் வாங், கம்போங் லோரோங் மசூதி, பந்தாய் டின், கம்போங் பாடாங் செராய் ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கம்போங் டெர்சுசன், தாமான் அங்கேரிக், கம்போங் பபூலாவ் கபுங் ஆகிய இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.























