பித்ரு காயத்ரி மந்திரம்

முன்னோர்களின் ஆசிர்வாதம் யார் ஒருவருக்கு இருக்கிறதோ அவருடைய வாழ்க்கையில் எந்தவித தடைகளும் உண்டாகாது, சுப காரியங்கள் அனைத்தும் விரைவில் நடைபெறும், வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். ஒருவேளை பித்ரு தோஷம் ஏற்பட்டு விட்டால் அவருக்கு மட்டுமல்லாமல் அவருடைய வருங்கால சங்கதிகளுக்கும் பாதிப்புகள் உண்டாகும். இந்த பாதிப்புகளிலிருந்து விலக கூற வேண்டிய பித்ரு காயத்ரி மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எப்படி ஒவ்வொரு திதிக்கும் உகந்த தெய்வங்கள் இருக்கிறார்களோ அப்படிதான் அமாவாசை திதிக்கு உகந்த தெய்வமாக நம்முடைய முன்னோர்கள் இருக்கிறார்கள். எப்படி நாம் தெய்வத்தை வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை கூறி வழிபடுகிறோமோ அதே போல் முன்னோர்களுக்கும் மந்திரங்கள் என்பது இருக்கிறது.
அந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும்பொழுது முன்னோர்களின் அருள் நமக்கு கிடைக்கும். முன்னோர்களின் அருள் கிடைத்து விட்டாலேயே நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது உண்டாக்கும். அந்த வகையில் இந்த பித்ரு காயத்திரி மந்திரம் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
யார் ஒருவருக்கு பித்ரு தோஷம் இருக்கிறதோ, முன்னோர்களின் அருளாசி கிடைக்கவில்லையோ, குடும்பத்தில் சுப காரிய தடைகள் இருக்கிறதோ, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகரித்து நிம்மதி இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறதோ, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் தள்ளிப் போகிறதோ, வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லையோ அவருக்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
அப்படி முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைப்பதற்கும் பித்ரு தோஷம் முற்றிலும் நீங்குவதற்கும் வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய அனைத்து விதமான செல்வங்களும் கிடைப்பதற்கும் நாம் கூற வேண்டிய பித்ரு காயத்ரி மந்திரம் ஒன்று இருக்கிறது. இந்த மந்திரத்தை அனு தினமும் கூறலாம், அமாவாசை திதி வரக்கூடிய நாட்களில் கூறலாம். அப்படி பார்க்கும் பொழுது இன்று புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை. இதை மகாளய அமாவாசை என்று கூறுவோம்.
இந்த நாளில் நாம் செய்யக்கூடிய தர்ப்பணங்களையும் படையலையும் முன்னோர்களே நேரடியாக வந்து ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு நம்பிக்கையின் நிலவுகிறது. அதனால் இன்றைய நாளில் நாம் இந்த மந்திரத்தை கூறும்பொழுது முன்னோர்கள் மனமகிழ்ந்து நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்ப்பார்கள். இந்த மந்திரத்தை அமாவாசை திதி நிறைவடைவதற்குள் கூற வேண்டும்.
முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கும் பட்சத்தில் படையல் இட்ட பிறகு இந்த மந்திரத்தை கூறி கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்யலாம். இந்த மந்திரத்தை குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைவரும் கூறுவது மிகவும் சிறப்பு. ஆண், பெண், குழந்தைகள் என்று எந்த கட்டுப்பாடும் கிடையாது. இந்த மந்திரத்தை கூறும்பொழுது கையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு முழு மனதோடு கூற வேண்டும்.
குறைந்தபட்சம் ஒருமுறை கூறினால் போதும். அதிகபட்சம் எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை முன்னோர்களின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். எப்பொழுது நீங்கள் அருகில் இருக்கக்கூடிய நீர் நிலைக்கு செல்லும் சூழ்நிலை உண்டாகிறதோ அப்பொழுது இந்த ஒரு ரூபாய் நாணயத்தை நீர்நிலைகளில் போட்டு விட வேண்டும்.
ஓம் பித்ரு கனாய வித்மஹே
ஜகத் தாரனி தீமஹி
தந்நோ பித்ரோ பிரசோதயாத்
மிகவும் எளிமையான இந்த பித்ரு காயத்ரி மந்திரத்தை இன்று ஒருமுறை மட்டுமாவது முழு மனதோடு முன்னோர்களை நினைத்து கூறுபவர்களுக்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here