அதேவேளை, அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக செயல்பட்டு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை மேற்கொண்டனர். மேலும், சிறப்பு முகாம்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பணிச்சுமை காரணமாக சிலர் தற்கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்னாகஸ் மாவட்டம் முகுந்தபூரை சேர்ந்தவர் அசோக் தாஸ். இவர் அம்மாவட்டத்தில் உள்ள ஜாய் நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அசோக் தாஸ் வாக்குச்சாவடி நிலை அலுவலராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், அசோக் தாஸ் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிச்சுமை காரணமாக அசோக் தாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









