கோலாலம்பூர், பிப்ரவரி 25, 2026:
உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மலேசியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விலையேற்றம் நாளை (பிப்ரவரி 26) முதல் அமலுக்கு வருகிறது.
புதிய விலை விவரங்கள் (லிட்டருக்கு):பெட்ரோல் RON 97 RM 3.10 ரிங்கிட்டிலிருந்து RM 3.15 ஆக அதிகரித்துள்ளது, பெட்ரோல் RON 95 (மானியமற்றது)RM 2.54 ரிங்கிட்டிலிருந்து RM 2.59 ஆக அதிகரித்துள்ளது.
தீபகற்ப மலேசியா டீசல் RM 2.99 ரிங்கிட்டிலிருந்து RM 3.04 ஆக அதிகரித்துள்ளது, அதேநேரம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மானியத்துடன் கூடிய எரிபொருட்களின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை:மானிய பெட்ரோல் (RON 95): ஒரு லிட்டர் RM 1.99 என்ற நிலையான விலையிலேயே தொடரும் என்று அதுமேலும் கூறியுள்ளது.





















