கிள்ளான்,
GM Klang போர்ட் ஆர்ட்ஸ் என்ற ஒரு புதிய படைப்பாற்றல், கலாச்சார மையத்தைத் தொடங்கி இருக்கிறது. இது சிலாங்கூர், கிள்ளானின் உள்ளூர் கலைத் திறமைகள், கைவினைப்பொருட்கள், தயாரிப்புகளை உள்நாட்டு, வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்துகிறது.
வர்த்தகம், கலாச்சாரம், பயணம் ஆகியவற்றின் சந்திப்புப் புள்ளியாக விளங்கும் போர்ட் கிள்ளான் தாக்கத்தால் போர்ட் ஆர்ட்ஸ் துறைமுகம் என்ற கருத்திற்கு ஒரு புதிய விளக்கத்தை அளிக்கிறது. இது வெறுமனே தங்கிச் செல்லும் ஓர் இடம் மட்டுமல்ல. எண்ணங்கள், கலை வெளிப்பாடுகள், உத்வேகம் ஆகியவை செழித்து வளர்ந்து புதிய பயணங்களைத் தொடங்குவதற்கான ஓர் இடமாகவும் விளங்குகிறது.
ஜிஎம் கிள்ளானில் உள்ளூர் கலைகள், கலாச்சாரம், கைவினைப்பொருட்கள், சமூகங்களை ஒரே இடத்தில் ஒன்றிணைப்பதன் மூலம் போர்ட் ஆர்ட்ஸ் இந்த மொத்த விற்பனை மையம், கிள்ளானின் எப்போதும் வளர்ந்து வரும் கலாச்சாரச் சூழலில் அதன் பங்கு ஆகியவற்றிற்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.
சிலாங்கூரின் சமூகம், பாரம்பரியம், தனித்துவமான கலாச்சாரத்தை பார்வையாளர்கள் நன்கு அறிந்துகொள்ளும் அதேவேளையில் உண்மையான உள்ளூர் தயாரிப்புகளைக் கண்டறிந்து வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஒரு பிரத்தியேக இடத்தை உருவாக்கும் சாத்தியத்தை Tourism Selangor தலைமை நிர்வாக அதிகாரி திருமதி சுவா யீ லிங்கின் உத்வேகம், ஊக்கத்தால் இந்த முயற்சி நனவாகி இருக்கிறது.
நான்கு கூறுகள், ஒரு படைப்பாற்றல் இலக்கு
போர்ட் ஆர்ட்ஸ் நான்கு முக்கிய கூறுகளை ஒன்றிணைக்கிறது:
1. Select Shop (தேர்ந்தெடுக்கும் கடை)
கையால் செய்யப்பட்ட பொருட்கள், கைவினைப் பொருட்கள், உள்ளூர் கைவினைப் பொருட்களைக் கொண்ட ஒரு சில்லறை விற்பனை இடம். அபி ஹவுஸால் இயக்கப்படும் Select Shop உள்ளூர் படைப்பாற்றல் மிக்க கலைஞர்கள், தொழில்முனைவோர் தங்கள் படைப்புகளை பரந்த பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்த ஓர் இடத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் பார்வையாளர்களுக்கு சிலாங்கூரின் தனித்துவத்தின் ஒரு பகுதியை அனுபவிக்கும் வா#ப்பையும் அளிக்கிறது.
2. Gallery (காட்சியகம்)
உள்ளூர் கலைஞர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தவும், தங்கள் கலையை புதிய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தவும் ஒரு தளம். அதன் தொடக்கக் கண்காட்சியான கிள்ளான் ஆர்ட் ஹார்மனியில், 30 கிள்ளான் கலைஞர்களின் 61 படைப்புகள் இடம்பெற்றன. இது உள்ளூர் கலை சமூகத்தைப் பிரதிபலிக்கும் படைப்பாற்றல் பாணிகள், அணுகுமுறைகள், கண்ணோட்டங்களின் பன்முகத்தன்மையைக் கொண்டாடியது.
3. சிற்றுண்டிச்சாலை (விரைவில்)
வரவிருக்கும் இந்த சிற்றுண்டிச்சாலை கலை, கலாச்சாரத்தால் ‹ழப்பட்ட ஒரு சூழலில் பார்வையாளர்கள் ஓய்வெடுக்கவும் ஒன்றுகூடவும் உணவு, பானங்களை உண்டு மகிழவும் ஒரு வசதியான இடத்தை வழங்குவதன் மூலம் போர்ட் ஆர்ட்ஸில் கிடைக்கும் அனுபவத்தை முழுமையாக்கும்.
4. புலாவ் கெத்தாம் கலைப் பிரிவு
புலாவ் கெத்தாமின் கலை, கலாச்சார வெளிப்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பிரிவு கிள்ளானில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட சமூகங்களில் ஒன்றின் தனித்தன்மை, கதைகள், படைப்பாற்றல் பாரம்பரியத்துடன் பார்வையாளர்களை நெருக்கமாக இணைக்கிறது.
உள்ளூர் படைப்பாற்றலை சுற்றுலாவோடு இணைத்தல்
கிள்ளான், சிலாங்கூரில் உள்ள படைப்பாற்றல் சமூகங்களின் பின்னணியில் உள்ள படைப்பாளிகள், கதைகள், கைவினைப்பொருட்களைப் பார்வையாளர்கள் அறிந்துகொள்வதற்கானஓர் இடத்தை உருவாக்குவதன் மூலம் உள்ளூர் படைப்பாற்றலுக்கும் சுற்றுலாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதை போர்ட் ஆர்ட்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பின் மூலம், ஜிஎம் கிள்ளான் உள்ளூர் கலைஞர்கள், கைவினைஞர்கள், படைப்பாற்றல் தொழில்முனைவோரை ஆதரிப்பதோடு, சிலாங்கூரில் படைப்பாற்றல் சுற்றுலாவின் வளர்ச்சிக்கும் பங்களிக்க துணை புரிகிறது.
வர்த்தகத்திலிருந்து படைப்பாற்றல் வரை.
போர்ட் ஆர்ட்ஸ் ஜிஎம் கிள்ளானின் பாரம்பரியமான B2B அடிப்படையிலான மொத்த விற்பனை மையத்திலிருந்து B2B2C அணுகுமுறைக்கு மாறிவரும் தொடர்ச்சியான மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது. இது மொத்த விற்பனை வணிகத்தின் அடித்தளத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவதோடுஶீ நுகர்வோர், வணிகங்கள், சமூகத்திற்கான அனுபவத்தையும் வா#ப்புகளையும் விரிவுபடுத்துகிறது.
ஜிஎம் கிள்ளான் நீண்ட காலமாக B2B பிரிவில் முக்கிய பலத்துடன் ஒரு மொத்த விற்பனை மையமாக அறியப்படுகிறது. இப்போது மாறிவரும் வணிகச் சூழல், சமூகத்தின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, மொத்த விற்பனையின் அடித்தளத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி, நுகர்வோருக்கான அனுபவத்தை விரிவுபடுத்துவதன் மூலம் நாங்கள் B2B2C அணுகுமுறையை நோக்கி நகர்கிறோம். இந்த திசையில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் போர்ட் ஆர்ட்ஸும் ஒன்றாகும். இது உள்ளூர் கலை, கலாச்சாரம், படைப்பாற்றலுக்கு இடமளித்து, அவற்றை ஜிஎம் கிள்ளான் சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக மாற்றுகிறது. இதன் மூலம் உள்ளூர் திறமையாளர்களை கிள்ளான்ஶீ மலேசியாவின் பிற பகுதிகள், வெளிநாடுகளில் உள்ள பார்வையாளர்களுடன் இணைக்கிறது.
போர்ட் ஆர்ட்ஸின் தொடக்கமானது ஜிஎம் கிள்ளானின் பாரம்பரிய வணிகச் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அதன் பங்கை விரிவுபடுத்துவதிலும், கலை, கலாச்சாரம், சமூகம், சுற்றுலாத் துறைகளில் புதிய வா#ப்புகளை ஆராய்வதிலும் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
கலைக்கூடங்கள், கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், கலாச்சாரக் கண்காட்சிகள், திறக்கப்படவிருக்கும் ஒரு சிற்றுண்டிச்சாலை ஆகியவற்றின் கலவையுடன் போர்ட் ஆர்ட்ஸ் பார்வையாளர்கள் உள்ளூர் படைப்பாற்றலை ஆராய்ந்து அனுபவிப்பது மட்டுமல்லாமல், கிள்ளான், சிலாங்கூரின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளையும் பொருட்களையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஒரு இடமாக அமையும் நோக்கம் கொண்டது.
போர்ட் ஆர்ட்ஸ், கிள்ளானில் உள்ள பண்டார் பொட்டானிக், ஜிஎம் கிள்ளான், புளோக் சி, பெவிலியன் 5-இல் அமைந்துள்ளது. மேலும் பார்வையாளர்கள் உள்ளூர் கலை, கலாச்சாரம், படைப்புப் பொருட்களை ஒரே இடத்தில் ஆராய் வதற்கான ஒரு புதிய இடமாக இது திறக்கப்பட்டுள்ளது.





















