மம்தா பானர்ஜியின் மருமகள் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

கொல்கத்தா, மம்தா பானர்ஜியின் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜி மருமகள்

மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜியின் மருமகள் பிருஷ்டி முகர்ஜி (வயது 28). இவர் மம்தா பானர்ஜியின் தாயார் வழியில் மருமகள் முறை ஆவார்.

இதனிடையே, பிருஷ்டி முகர்ஜிக்கு திருமணமாகி கணவர், மகன் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக பிருஷ்டி முகர்ஜி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

பிம்பூர் மாவட்டம் குஷம்பா கிராமத்தில் உள்ள தாயார் வீட்டில் பிருஷ்டி முகர்ஜி வசித்து வந்தார்.

தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில், பிருஷ்டி முகர்ஜி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் தனியாக இருந்த பிருஷ்டி முகர்ஜி இன்று அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று பிருஷ்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here