நெகிரி செம்பிலானிலுள்ள பள்ளி விடுதியில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் படிவ மாணவர்; உயிரிழப்பிற்கு கொடூர பகிடிவதை காரணம் என சந்தேகம்?

கோலாலம்பூர்:

நெகிரிசெம்பிலானிலுள்ள பள்ளி ஒன்றின் விடுதிப் பகுதியில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட படிவம் இரண்டு மாணவர் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

சேமென்சேவைச் சேர்ந்த மூத்த மகனான அந்த மாணவர், விடுதியில் சக மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதால் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“கிடைக்கப்பட்ட தகவலின்படி, விடுதியில் மயக்கமடைந்து கிடந்த மாணவரைக் கண்டதும் விடுதிக் காப்பாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் HTAN அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.” என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here