ஜோகூரில் உள்ள ஜலான் சுல்தானா, பத்து பஹாட்,அருகே உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம், நேற்று வியாழன் (ஆகஸ்ட் 24) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டது.
அங்குள்ள டயர் கடைக்கு அருகில் உள்ள ஒரு சாக்கடையில் சடலம் சிக்கியிருந்தது என்றும், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக, பத்து பகாட் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் இஸ்மாயில் டோலா தெரிவித்தார்.

உடனே தீயணைப்புத்துறையின் உதவியுடன் சடலம் வாய்க்காலிலிருந்து மீட்கப்பட்டது, சடலத்தின் உடலின் எந்த காயமும் இல்லை என்றும், அவர் வாய்க்காலிலுள்ள நீரில் மூழ்கி அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த சடலத்தை அடையாளம் காண போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளதாகவும், இவ்வழக்கை திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.









