Home விளையாட்டு பரபரப்பான இறுதியாட்டத்தில் பேராவை 1-0இல் வீழ்த்தி மலேசிய எப்.ஏ. கிண்ணத்தை வென்ற கெடாவுக்கு வெகுமதி...

பரபரப்பான இறுதியாட்டத்தில் பேராவை 1-0இல் வீழ்த்தி மலேசிய எப்.ஏ. கிண்ணத்தை வென்ற கெடாவுக்கு வெகுமதி காத்திருக்கிறது

புக்கிட் ஜாலில் அரங்கில் நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கெடா குழு 1-0 என்ற கோல்கணக்கில் பேராவை வீழ்த்தி எப்.ஏ. கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது.

நேற்று முன்தினம் புக்கிட் ஜாலில் அரங்கில் நடந்த இவ்விரு குழுக்கள் இடையிலான ஆட்டத்தை 83,000 ரசிகர்கள் நேரடியாக கண்டுகளித்தனர்.

கடந்த 2007ஆம் ஆண்டில் எப்.ஏ. கிண்ணத்தை வென்று கெடா குழு, 12 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் எப்.ஏ. கிண்ணத்தை வென்றிருக்கிறது.

சிலாங்கூர் குழு மொத்தம் 5 முறை எப்.ஏ. கிண்ணத்தை வென்றுள்ளது. இப்போது இந்த வரிங்யைில் கெடாவும் இடம்பெற்று 5 முறை கிண்ணத்தை வாகை சுடியிருக்கிறது.

பேராவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கெடா குழு தொடக்கத்தில் தடுமாறியது. முதல் பாதியில் பேரா ஆட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல்களை கெடா கோல்கீப்பர் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார்.

பிற்பகுதியில் இரு குழுக்களும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தின. குறிப்பாக பேராவுக்கு விளையாடிய இளம் ஆட்டக்காரர்  பார்த்திபன் சிறப்பாக விளையாடி ரசிகர் களை கவர்ந்தார்.

90 நிமிடத்தில் இரு குழுக்களும் கோல்களை அடிக்காததால் வெற்றியாளரை முடிவு ஙெ்ய்ய 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. 113ஆவது கெடாவின் நிமிடத்தில் இளம் ஆட்டக்காரர் முகமட் பாட்ருல் அற்புத கோலை அடித்து வெற்றியை உறுதிச் ஙெ்ய்தார்.

இறுதியில் கெடா 1-0 என்ற கோல்கணக்கில் பேராவை வீழ்த்தி எப்.ஏ. கிண்ணத்தை வென்றது. கெடா ஆட்டக்காரர்களுக்கு மிகப்பெரிய வெகுமதி காத்துக் கொண்டிருப்பதாக கெடா மந்திரிபெங்ார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் அறிவித்தார்.

இதனிடையே, எப்.ஏ. கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தை கண்காணித்த ஜப்பானைச் ஙே்ர்ந்த ஃபீபா நடுவர் டகுடோ ஓகாவே  ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றார்.

Previous articleஜோகூர் மாநிலத்தில் முதல் கபடி அகாடமி ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இராமகிருஷ்ணன் அறிவிப்பு
Next articleதமிழ்ப்பள்ளி மாணவர்களும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version