Home தொழில்நுட்பம் செவ்வாய்க் கிரகத்தை படம்பிடிக்க மினி-ஹெலிகாப்டர்

செவ்வாய்க் கிரகத்தை படம்பிடிக்க மினி-ஹெலிகாப்டர்

செவ்வாயின் வான் பரப்பில் பறக்கவுள்ள சில ஹெலிகாப்டர்கள் மூலம் வேற்றுக் கிரகங்களைப் பற்றிய ஆய்வில் முற்றிலும் புதிய வகையிலான ஆய்வுகளை மேற்கொள்ளமுடியும். இதற்காக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தி, பிப்ரவரி 2021ல் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்க திட்டமிட்டுள்ள நாசாவின் மார்ஸ் 2020 ரோவர் மிஷனின் ஒரு பகுதியாக, தானியங்கி மினி-ஹெலிகாப்டர் ஒன்றும் விண்ணில் பறக்கவுள்ளது.

இந்த ஹெலிகாப்டர் செவ்வாயின் வான்பரப்பில் அதிகபட்சமாக 5 குறுகிய பயணங்களை மேற்கொள்ளமுடியும். இந்த முன்னோடியான திட்டம் வெற்றி பெறும்பட்சத்தில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படும். தற்போது வேற்றுக்கிரகங்களை ஆராய மனிதர்களுக்கு உள்ள பல்வேறு தடைகளை தகர்த்தெறியும் விதமாக இந்த ரோபோ ஆராய்ச்சியாளர்களின் வளர்ச்சி அமையும். செவ்வாய்க் கிரகத்தில் புதிய வகையான ஆராய்ச்சிகளுக்கான கதவுகளை இந்த ஹெலிகாப்டர்கள் திறக்கும் என நம்புவதாக மார்ஸ் ஹெலிகாப்டர் திட்டத்தின் ப்ளைட் கண்ட்ரோல் மற்றும் ஏரோடைனமிக்ஸ் லீட் ஹாவார்ட் கிரிப் தெரிவித்துள்ளார்.

நாசாவின் ஜெட் உந்துசக்தி ஆய்வகம் மேலும் மேம்படுத்தப்பட்ட இதுபோன்ற ஹெலிகாப்டர்கள் ஒரு நாள் ரோவர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் அல்லது தாங்களே சொந்தமாக செவ்வாய்க் கிரகத்தை ஆராயவும் முடியும் என்கிறார் கிரிப். இவர் நாசாவின் ஜெட் உந்துசக்தி ஆய்வகம் மற்றும் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்தவராவார். இந்த மார்ஸ் ஹெலிகாப்டர் 4 பவுண்ட் எடையுள்ளது.

(1.8 கிலோகிராம்) மற்றும் இதன் உடல்பகுதியானது சாப்ட்பாஃலின் அளவே இருக்கும். இதில் மின்னியல் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள், சிறிய அளவிலான சூரியசக்தி பேனல், ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம்-அயன் பேட்டரிகள், கடும் குளிர் நிலவும் செவ்வாயின் இரவுகளில் மின்னணு பொருட்களைப் பாதுகாக்க சர்வைவல் ஹீட்டர்கள் ஆகியவை உள்ளன. இந்த ஹெலிகாப்டர் எந்தவொரு அறிவியல் உபகரணங்களும் இல்லாத நிலையில், உயர்தர கலர் இமேஜர் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்தியே உயர்தர புகைப்படங்களை எடுத்து அவற்றை பூமிக்கு அனுப்ப முடியும் என்று தெரிவித்திருக்கிறார் கிரிப்.

Previous article5 கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கும் நோக்கியா
Next articleவிமானம், புல்லட் ரயிலை விட அதிவேகமாக செல்லக்கூடிய ஹைப்பர்லூப் போக்குவரத்து

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version