Home உலகம் லோரி ஓட்டுநரிடமிருந்து லஞ்சப் பணம் இரு போலீசார் கைது

லோரி ஓட்டுநரிடமிருந்து லஞ்சப் பணம் இரு போலீசார் கைது

ஜோர்ஜ் டவுன்

லோரி ஓட்டுநரிடமிருந்து 400 ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்ற இரு போலீஸ்காரர்கள் நேற்று, ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 28 வயது கார்ப்பரலும் 25 வயது கான்ஸ்டபலும் அடங்குவர். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஜெலுத்தோங்கில் கைது செய்யப்பட்டனர்.

சனிக்கிழமை ஒரு நண்பருக்காகத் தாம் ஜெலுத்தோங், லோரோங் ஹிஜாவ் 3ல் காலை 10 மணியளவில் காத்துக் கொண்டிருந்தபோது, போலீஸ்காரர்கள் தம்மை அணுகி, கைப்பேசியைச் சோதித்த பின்னர், தாம் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டதாகச் சொல்லி இருக்கிறார்.

சனிக்கிழமை, ஆகஸ்டு 17ஆம் தேதி, 32 வயதான லோரி ஓட்டுநர் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தபோது, வழக்கு நீதிமன்றத்துகுச் சென்றால் 12,000 ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டிவரும். தங்களிடம் சமரசம் செய்து கொண்டால், 2,000 ரிங்கிட்டுக்குள் முடித்துக் கொள்ளலாம் என சொல்லியிருக்கின்றனர்.

பின்னர் அந்த ஓட்டுநர் தம்மிடம் இருந்த 200 ரிங்கிட்டோடு, வங்கியில் எடுக்கப்பட்ட 200 ரிங்கிட்டையும் கொடுக்கப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினரின் அறிவுறுத்தலுக்குப் பின்னர், அவர் அதனை போலீசில் புகார் செய்துள்ளார்.

இன்று அந்தப் போலீஸ்காரர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு, விசாரணைக்காகத் தடுப்புக்காவல் கோரப்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version