Home Uncategorized அரசுப் பள்ளிகளில் 1000 புத்தகங்களுடன் நூலகம்!

அரசுப் பள்ளிகளில் 1000 புத்தகங்களுடன் நூலகம்!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது 1000 புத்தகங்களுடன் நுாலகம் செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘ஒவ்வொரு அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தது 1000 புத்தகங்கள் உள்ளவாறு பள்ளி நுாலகம் செயல்பட வேண்டும்.

இந்நூலகத்துக்கு தினமும் தமிழ் மற்றும் ஆங்கிலத் தினசரி செய்தித்தாள் வாங்கி மாணவர்கள் படிக்க அறிவுறுத்த வேண்டும். நுாலகப் பணியை மேற்கொள்ள ஒரு ஆசிரியரை நியமித்து மாணவர்களின் நுாலகம் பயன்படுத்தும் திறனை அதிகரிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் மாணவர்களுக்கு படிக்கும் வாய்ப்பு அளித்து வாசிக்கும் திறன், பேச்சுத் திறன், எழுத்துத் திறன், ஆங்கிலம் பேசும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தவேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகாதலனுக்காக தாயைக் கொல்ல சதி பெண் கைது!
Next articleதேசியக் கல்விக் கொள்கையில் மாற்றம் வேண்டும்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version