Home சினிமா உன்னை குப்பை மாதிரி வீசி எறிந்தவன் அவனுக்கு நீ ஆதரவா காஜல் ! !

உன்னை குப்பை மாதிரி வீசி எறிந்தவன் அவனுக்கு நீ ஆதரவா காஜல் ! !

சென்னை 

பல படங்களில் நடிகையாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்தவர் காஜல் பசுபதி. கடந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் நடன இயக்குநரான சாண்டியை திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

கடந்த ஆண்டு சாண்டி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு வயதில் லாலா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சாண்டி.

பிக்பாஸ் வீட்டில் கவீனுடன் மட்டுமே நெருக்கமாக உள்ளார் சாண்டி. இதனால் இந்த வார எலிமினேட்டிற்கு நாமினேட்டான சாண்டிக்கு ஆதரவு அளிக்க கவீனின் ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதனை பார்த்த காஜல், அவர்களின் ரசிகர்கள் மத்தியிலும் அழகான நட்பு பரவி வருகிறது. சிறப்பான பாஸிட்டிவிட்டி. உங்கள் வெற்றிக்கு சந்தோஷத்திற்கும் கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும், லவ் யூ ஆல் என்று பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், அந்த கேடு கெட்டவன் உன்ன குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சுட்டான்.. நீ அவனுக்கு கூஜா தூக்கிட்டு திரியுற என்று பதிவிட, அந்த ட்விட்டை பார்த்த காஜல் கடுப்பாகி, அவரு என்னை தூக்கி எறிஞ்தை நீ பாத்தியா.. உன் அளவுக்கு கீழே இறங்கி பதில் சொல்ல நான் விரும்பல, பரஸ்பர சம்மதம் என்று ஒன்று உள்ளது. மத்தவங்க லைஃப் பத்தி தெரியாமா எல்லாத்துக்கும் கதறாத என்று பதிவிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version