Home இந்தியா கடும் நிதி நெருக்கடியில் ரயில்வே தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு

கடும் நிதி நெருக்கடியில் ரயில்வே தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் ரயில்வே துறை ஐ.ஆர்.சி.டி.சி.-யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய ஆயத்தமாகியிருக்கிறது. புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் மத்திய அரசு விண்ணப்பித்துள்ளது. இந்த புதிய பங்கு வெளியீட்டீன் மூலமாக ரூ.10 முக மதிப்பு கொண்ட 2 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

இதன் மூலம் ரூ.600 கோடி வரை மத்திய அரசுக்கு கிடைக்கும் என சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.டி.பி.ஐ. கேபிடல் மார்கெட் & செக்யூரிட்டிஸ், எஸ்.பி.ஐ. கேபிடல் மார்கெட்ஸ், எஸ் செக்யூரிட்டிஸ், ஆகிய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டிற்கான பணிகளை நிர்வகிக்க உள்ளது.

பிரதமர் மோடி முதல் முறையாக  ஆட்சிக்கு வந்த ரயில்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் தள்ளிப் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை வேகம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version