Home மலேசியா பாராங்கத்தி ஏந்திய இந்தோனேசிய ஆடவன் சுட்டுக் கொல்லப்பட்டான்

பாராங்கத்தி ஏந்திய இந்தோனேசிய ஆடவன் சுட்டுக் கொல்லப்பட்டான்

லாஹாட் டத்து

போலீசாரை பாராங் கத்தியால் வெட்ட முனைந்த இந்தோனேசிய ஆடவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இன்று அதிகாலை 3.40 மணிக்கு பால்ம் ஹைட்ஸ் எனும் இடத்தில் கத்தியோடு சுற்றித் திரிந்த அந்த 28 வயது ஆடவன், போலீசாரை நோக்கி கத்தியால் தாக்க வந்தபோது, தற்காப்புக்காகச் சுட்டதில் அவன் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டான்.

அந்தக் குடியிருப்பில் அவன் வீடு புகுந்து கொல்லையடிக்க முனந்துள்ளான். சந்தேக நபர் கருப்பு உடையணிந்து, முகமூடியோடு காணப்பட்டதால், அவனை சோதனையிட முனைந்த போலீசாரைத் தாக்க முனைந்தான்.

நெஞ்சில் சூடு பட்டு அவன் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவனிடத்தில் அடையாள ஆவணம் எதுவும் இல்லை. 2017ஆம் ஆண்டு அவன் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்ததால், 6 மாத சிறையும் 3 பிரம்படியும் கொடுக்கப்பட்டது.

தண்டனை முடிந்து தாய்நாடு செல்ல உத்தரவிடப்பட்டிருந்தும், அவன் இந்தோனேசியாவுக்குச் சென்று, மீண்டும் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்துள்ளான்.

அவனது குடும்பத்தார் உடலைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Previous articleநெடுஞ்சாலையில் விபத்து – பாதிக்கப்பட்டவருக்கு பேரரசர் ஆறுதல்
Next articleபெர்சத்துவுக்கு தாவிய 3 பேர் மீது அம்னோ வழக்கு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version