Home இந்தியா நாளை ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி; கூடங்குளம் தவிர, இந்தியாவில் மேலும் 6 இடங்களில் அணு...

நாளை ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி; கூடங்குளம் தவிர, இந்தியாவில் மேலும் 6 இடங்களில் அணு உலைகள்?

புதுடெல்லி: ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார  மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு  விடுக்கப்பட்டது. இதனையொட்டி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அவர் இன்று  ரஷ்யா புறப்படுகிறார். இந்த பயணத்தின்போது ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினுடன் பாதுகாப்பு, வர்த்தகம், அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது, கூடங்குளம் தவிர, இந்தியாவில் மேலும் 6 இடங்களில் அணு உலைகள் அமைப்பதற்கான இறுதி ஒப்பந்தம் ஏற்பட உள்ளது. அதேபோல அவர் ரஷிய அதிபருடன் 20-வது வருடாந்திர இருநாட்டு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். ரஷியாவில் உள்ள விலாடிவோஸ்டோக் நகருக்கு நாளை சென்றடையும் பிரதமர் மோடி அங்குள்ள மிகப்பெரிய கப்பல் கட்டும் தளத்தை ரஷிய அதிபருடன் பார்வையிடுகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version