Home மலேசியா கிள்ளான் பெர்க்லி கார்னர் உணவகம் இடிக்கப்பட்டது

கிள்ளான் பெர்க்லி கார்னர் உணவகம் இடிக்கப்பட்டது

கிள்ளான்

கிள்ளானில் பிரபலமாக விளங்கி வந்த பெர்க்லி கோர்னர் எனும் இந்தியர் உணவகத்தை அமலாக்க அதிகாரிகள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.

அது சம்பந்தமான வழக்கு ஈராண்டுகளாகத் தொடர்ந்த பின்னர், நீதிமன்றம் அந்த உணவகத்தை இடிக்க உத்தரவிட்டது.

தாமான் பெர்க்லியில் அந்த உணவகம் மாநில நிலத்தில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறி கிள்ளான் மாவட்ட நில அலுவலகத்தின் உத்தரவின் பேரில் நேற்று இரவு 10.30க்குத் தொடங்கி காலை 2 மணிக்குள் உஅடைக்கப்பட்டது.

அந்த உடைப்பு நடவடிக்கையில் அமலாக்க அதிகாரிகள், போலீசார், தீயணைப்பு, மீட்புப் படையினர் உட்பட 260 பேர் பங்கெடுத்துக் கொண்டனர். அதில் நான்கு கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

உணவகத்தை உடைப்பதற்கு முன்னர், 10 நிமிட நேரம் கொடுக்கப்பட்டு, சமயலறை பாத்திரங்கள் குளிர்சாதன பெட்டியை அகற்றிய பின்னர், அதன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இடிப்பதற்கு முன்னர், அசம்பாவிதம் ஏதும் நடக்காமலிருக்க அதன் வளாகம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.

Previous articleபாசிர்மாசில் 10 மில்லியன் பெறுமான போதைப்பொருள் பறிமுதல்
Next articleபுதிய இடத்தில் லாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளி காட்டுமானாப் பணிகள் தொடங்கி விட்டன

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version