Home Hot News செபெராங் பிறை மாநகராகப் பிரகடனம்

செபெராங் பிறை மாநகராகப் பிரகடனம்

பட்டர்வொர்த் – பினாங்கு தாய் நிலமான செபெராங் பிறை இன்று மாநராகப் பிரகடனப்படுத்தப்பட்டதால், அது நாட்டிலேயே பெரிய மாநகர் எனும் அந்தஸ்தைப் பெற்றது.

கப்பாளா பத்தாஸ் டேவான் மில்லனியத்தில் அதன் பிரகடனத்தை மாநில கவர்னர் அப்துல் ரஹ்மான் வெளியிட்டார்.

ஊராட்சி மன்றத்தின் தலைவரான ரொசாலி முகமட் அதன் முதல் மேயராக நியமிக்கப்பட்டார்.

செபெராங் பிறையானது பட்டர்வொர்த், புக்கிட் மெர்தாஜாம் மற்றும் நிபோங் திபாலை உள்ளடக்கியது.

அது கோலாலம்பூர், ஈப்போ, பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம், அலோர் ஸ்டார், ஜோகூர் பாரு, மலாக்கா, கோலா திரெங்கானு, கோத்த கினபாலு, மிரி, வட கூச்சிங், தென் கூச்சிங், பினாங்கு தீவு போன்ற 13 மாநர்களோடு அது இணைந்துள்ளது.

செபெராங் பிறையை மாநகராக அறிவிக்கக் கோரும் நடவடிக்கை 2018 ஜூலையில் தொடங்கியது. அதன் மக்கள் தொகை 500,000ஐத் தாண்டி அதன் வருமானம் 10 கோடி ரிங்கிட்டாக அதிகரித்த பின்னர், அது தற்போது மாநகராக அறிவிக்கப்பட்டது.

அதன் தற்போதை மக்கள் தொகையானது 946,200 என்றும் சொல்லப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version