Home உலகம் 11 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனுடன் திருமணம்- தடை விதித்த அதிகாரிகள்

11 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனுடன் திருமணம்- தடை விதித்த அதிகாரிகள்

தெஹ்ரான் – வயது சிறுமிக்கும் 22 வயது இளைஞனுக்கும் நடைப்பெற்ற திருமணத்தை அந்நாட்டு அதிகாரிகள் தடை செய்துள்ளனர். வலுக்கட்டாயமாக தனது உறவுக்கார இளைஞனுடன் திருமணம் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவியதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இத்திருமண விவகாரம் பலருடைய கோபத்திற்கும் கண்டனத்திற்கும் ஆளாகியிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி பாஹ்மேய் என்னும் இடத்தில் அத்திருமணம் நிகழ்ந்தது. ஆனால், அந்த காணொளி செப்டம்பர் 1ஆம் திகதி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதோடு உள்நாட்டு செய்தி தொலைக்காட்சிகளிலும் இந்த காணொளி விரைவாக பகிரப்பட்டது. அந்த காணொளியில் அந்த சிறுமி பெற்றோர் சம்மத்ததுடன் எனக்கு விருப்பம் என்று கூறும் ஒலியும் பதிவாகியுள்ளது.

இருந்தபோதிலும், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. காரணம், பதின்ம வயது சிறார்களின் திருமணங்கள் சட்டப்படி குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆணுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version