Home உலகம் ஆஸ்திரேலியா காட்டுத்தீயின் புகை தென் அமெரிக்காவை எட்டியது!

ஆஸ்திரேலியா காட்டுத்தீயின் புகை தென் அமெரிக்காவை எட்டியது!

புவானஸ் அயர்ஸ் –

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காத வகையில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயினால் கிளம்பிக் கொண்டிருக்கும் புகை பதினோராயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தென் அமெரிக்கா வரை எட்டியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளான அர்ஜெண்டினா மற்றும் சிலியின் வான்வெளியில் புகைமூட்டம் காணப்படுகிறது. அங்கு சூரிய அஸ்தமனம் ரத்த நிறத்தில் காட்சியளிக்கிறது. ஆயினும், அந்த புகைமூட்டம் அபாயகர அளவை எட்டவில்லை என்று அர்ஜெண்டினா அதிகாரிகள் கூறினர்.

ஆஸ்திரேலியாவில் பல மாதங்களாக பற்றி எரிந்துவரும் காட்டுத் தீ இதுவரை நானூறு டன் கரியமில வாயுவை வெளியிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version