Home மலேசியா சாமிநாதன் உட்பட ஐவர் குற்றச்சாட்டை மறுத்தனர்

சாமிநாதன் உட்பட ஐவர் குற்றச்சாட்டை மறுத்தனர்

கோலாலம்பூர் –

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஐவர் நேற்று குற்றச்சாட்டை மறுத்தனர். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இவர்கள் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் (வயது 36), பழைய இரும்புப் பொருள் வணிகர் ஏ. கலைமுகிலன் (வயது 29), தொழில்நுட்பாளர் எஸ். அறிவேந்தன் (வயது 28), தபால்காரர் எஸ். தீரன் (வயது 39), ஆசிரியர் ஆர். சுந்தரம் (வயது 53) ஆகியோர் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தனர்.

குற்றச்சாட்டுகள் அனைத்தும் தமிழ்மொழியில் வாசிக்கப்பட்ட பின் அவர்கள் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சாமிநாதன், தீரன், சுந்தரம் ஆகியோர் மீது தலா ஒரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. விடுதலைப்புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததற்காக கலைமுகிலன் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதிக்கும் 12ஆம் தேதிக்கும் இடையே கோலாலம்பூர், மலாக்கா, ரவாங், சிலாங்கூர், தஞ்சோங் பங்ளிமா காராங் ஆகிய வெவ்வேறு பகுதிகளில் அவர்கள் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2018 அக்டோபர் மாதம் முகநூல் வாயிலாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக அறிவேந்தன் மீதும் தீரன் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
2018ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி டேவான் கஸ்தூரி, ஆயர் குரோ மலாக்காவில் விடுதலைப்புலிகளை ஆதரித்ததாக சாமிநாதன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அரசுத் தரப்பில் டிபிபி ரொஹாய்ஷா அப்துல் ரஹ்மான், அலிப் அஸ்ராப் அனுவார் ஷாருடின், முகமட் பிர்டாஸ், அபு ஹனிபா, அஸ்லினா ரஷ்டி ஆகியோர் வழக்கை நடத்துகின்றனர்.

கலைமுகிலன், தீரன் சார்பில் வழக்கறிஞர் டி. ராஜசேகரன் ஆஜரானார். அறிவேந்தன், சாமிநாதன், சுந்தரம் சார்பில் வழக்கறிஞர் ஹர்ஷான் ஜமானி ஆஜரானார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version