Home மலேசியா கோவிட் அச்சம் வீட்டிலிருந்த படியே வேலை சாத்தியமா?

கோவிட் அச்சம் வீட்டிலிருந்த படியே வேலை சாத்தியமா?

கோலாலம்பூர், மார்ச் 12-
கோவிட் அச்சத்தால் அலுவலகப்பணிக்கு தற்காலிக விடைகொடுக்கலாம் என்பது சாத்தியமானதுதான் என்பது தெளிவான முடிவாக இருக்கிறது. இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

கோவிட் 19 மோசமடையாமல் இருக்க வீட்டிலிருந்தே பணி செய்ய முடியும். ஓர் உதாரணமாக இரு நிறுவனங்கள் இவ்வுத்தரவை பிறப்பித்திருக்கின்றன.
இது முன்னேற்பாடுதான், இதனால் பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்கிறது கீ சைட் டெக்னாலாஜிஸ்ட், அஜிலேண்ட் டெக்னாஜிஸ்ட் ஆகிய இரு நிறுவனங்கள் .

இவ்விரு நிறுவனங்களும் இக்கட்டான சுழலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. ஆனாலும் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்ககறை செலுத்தப்பட்டிருக்கிறது என்று தங்கள் மின்னஞ்சள் செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றன.

மார்ச் 12 தொடங்கி மறு அறிவிப்புவரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் இந்நிறுவனங்கள் கூறியிருக்கின்றன. பணி நிமித்தம் இடையூறுகள் இருந்தாலும் ஊழியர்களின் சுகாதாரம் அவசியம் என்று உணரப்பட்டிருப்பதால் இந்நடவடிக்கை அவசியமாகிறது.

ஓர் ஊழியரின் சுகாதாரம் பாதிக்கப்பட்திருக்கிறது. ஆனாலும் அவருக்கு கோவிட் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு இணையவசதியின் மூலம் அனைத்துப்பணிகளும் செவ்வனே நடைபெறுவதாகக் குறிப்பிடபட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version