Home Hot News இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவது நிறுத்தி வைப்பு

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவது நிறுத்தி வைப்பு

அமெரிக்க தூதரகம்

புதுடெல்லி, மார்ச் 14- 

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். 50 மில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த 8 வாரங்கள் வைரசை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான தருணங்களாகும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா பரவலாம் என்பதால் வெளிநாட்டு பயணிகளை தடுக்கும் நடிவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளது.

அவ்வகையில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவது மார்ச் 16-

ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது. உலகளாவிய கொரோனா அச்சம் காரணமாக, விசா வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் அறிவித்துள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version