Home இந்தியா கொரோனா : தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா : தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு

தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி,மார்ச் 15–

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 140க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,436ஐ தாண்டியுள்ளது. உலகெங்கிலும் 145 நாடுகளில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 810 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்து உள்ளது. 67 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் உள்பட 87 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த 87 பேருடனும் தொடர்புடைய 4 ஆயிரம் பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. கொரோனா வைரசை பெரும் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ள நிலையில், அதனை தேசிய பேரிடராக உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே நிர்ணயிக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தேசிய மருத்துவ அமைப்பு வழங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று கொரோனாவை பேரிடராக கவனத்தில் கொண்டு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைரசுக்கு பலியான குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version