Home Hot News சம்பளமில்லா விடுமுறை வாழ்க்கைச் செலவுக்கு 600 வெள்ளி

சம்பளமில்லா விடுமுறை வாழ்க்கைச் செலவுக்கு 600 வெள்ளி

கோலாலம்பூர், மார்ச் 17-

மக்களுக்கானது அராசாங்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் வாழ்வாதாரத் தேவைகளுக்கு மாதம் 600 வெள்ளி வழங்க முன்வந்திருக்கிறது.

ஆறு மாதங்கள் வரை இந்நிதியைப் பெறும்வகையில், சம்பளமின்றி வேலை இழந்தவர்களுக்கு உதவ முன்வந்திருப்பதை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்திருக்கிறார்.

சம்பளமில்லா கட்டாய விடுப்புக்கு ஆளாகியிருக்கும் தொழிலாளர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவிருக்கிறது.

மேலும் வங்கிக்கடன், தெக்குன் கடன் ஆகியவற்றை இலகுவாக மாற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படிருக்கிறது.

நாட்டின் தொற்று நோய்ப்பட்டியலில் கொரோனா 19 சேர்க்கப்படிருக்கிறது. அதற்கான அறிவிப்பும் செய்யப்பட்டிருக்கிறது.

பொதுநிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தனித்திருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் சம்பளமில்லா விடுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

மின்சாரக் கழிவும் ஏப்ரல் மாதத்திலிருந்து நடப்புக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version