Home Hot News சொர்க்கபூமி சோர்ந்துகிடக்கிறதா?

சொர்க்கபூமி சோர்ந்துகிடக்கிறதா?

சொர்க்கபூமி சோர்ந்துகிடக்கிறதா?

கோலாலம்பூர் , மார்ச் 19 –

நெரிசல்களை மீறமுடியாமல் உரசிக்கொள்ளச்செய்யும் கோலாலம்பூர் மாநகரம் சோபை இழந்துகிடக்கிறது. சினிமா பாணியில் கூறப்படுமானால் பேய் நகரம்போல் காட்சியளிக்கிறது என்றுதான் கூறவேண்டும் போலிருக்கிறது.

பிரதமரின் கண்டிப்பான அறைகூவல் மீறப்படுவதாகத் தகவல் தெரிந்தாலும் தலைநகரின் முக்கியமான இடமாக விளங்கி வரும் புக்கிட் பிந்தாங் பகுதி வெறிச்சோடிக்கிக்கிறது என்றால் மக்களின் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மதிக்கப்படுகின்றன என்பதாகக் கொள்ளலாம்.

பல இடங்களில் மக்களின் அலட்சியம் இருக்கிறது என்பதைக் கேள்விப்படும்போது கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் இல்லை. வெளிநாட்டவர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் சிலர் மட்மே தட்டுப்படுகின்றனர்.

கார்களின் நகர்வுகள் சில மட்டுமே தென்படுகின்றன. தலைக்குமேல் இயங்கும் ரயில்களில் சில உருவங்கள் மட்டுமே தென்படுகின்றன.

இந்தப் பாதிப்பிலிருந்து விடுபட மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே முடியும். முடியாவிட்டால் எதிர்வினை கடுமையகவே இருக்கும் என்கிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version