Home மலேசியா பாசக் கடைகளா பாசாங்கு கடைகளா?

பாசக் கடைகளா பாசாங்கு கடைகளா?

பாசக் கடை

கோலாலம்பூர், மார்ச் 20-
பாசாக்கடைகளை பலர் பாசக்கடைகள் என்பார்கள். இப்படிக் கூறுவதில் அர்த்தமிருக்கிறது. ஆபத்து அவசர வேளைகளில் உடனடியாக பணம் தேவைப்படும். அவ்வேளைகளில் கொடுத்துதவ ஆளிருக்காது. நட்புகளையும் தொடர்பு கொள்ளமுடியாது.

இதற்கான ஒரே வழி பாசக் கடைகள் தான். இதற்கு அடகுக் கடைகள் என்று பெயர். தேவைக்கேற்ப பணம் பெற உடனடி வங்கியாகச்செயல்படும். இதற்கு விலையுள்ள பொருட்களைக் கொடுக்கவேண்டும் அதன் தரத்திற்கேற்ப பணம் கிடைக்கும்.

ஏழை மக்களின் வங்கி என்று பாசாக்கடையை கூறுவர். மாதத்தவணையில் வட்டி கணக்கிடப்படும். ஆறுமாதம் வரை தவணையில் அடகு வைக்கலாம்.

இதற்கு 1.5 காசு முதல் 2.0 காசு வரை வட்டி கணக்கிடப்படும். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இக்கடைகள் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். ஏழை மக்களுக்கு இதைவிட சிறந்த இடம் வேறு இருக்க முடியாது.

கொரோனா 19 நாட்டின் தீய சக்தியாக உருவெடுத்திருக்கும் இத்தருணத்தில் இரு வாரங்கள் மக்கள் நடமாட்டம் கட்டுப் படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அடகு வைத்த நகைகள் மீட்கப்பட முடியாத நிலையில் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மார்ச்- 18 முதல் மார்ச்-31 வரை இப்பிரச்சினை இருக்கும். நகைகள் மீட்கப்படும்போது இதற்கான வட்டி ஒரு மாதம் அல்லது இரு மாதஙகள் கணக்கிட்டு கூடுதலாக செலுத்த வேண்டிவரும். மேலும் இக்கடைகள் இக்காலக் கட்டத்தில் மூடப்பட்டிருப்பதால் ஏழைமக்கள் பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க சிரமப்படுவர்.

இக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்குவதோடு அடகு வைக்கப்பட்ட நகைகளுக்குக் கூடுதல் வட்டி பெறப்படக்கூடாது என்று சிலாங்கூர் கூட்டரசு பிரதேங் எம்.ஜி.ஆர் பொதுநலமன்ற உறுப்பினர் தமிழ்க்கண்ணன் தெரிவித்துள்ளார்.

இக்கடைகளை அரைநாள் என்றும் திறக்க முடிந்தால் அடகுப்பிரச்சினைக்கு வழி கிடைக்கும் என்கிறார் இவர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version