Home இந்தியா இத்தாலிபோல் நாமும் உதாசீனப்படுத்தக்கூடாது

இத்தாலிபோல் நாமும் உதாசீனப்படுத்தக்கூடாது

சென்னை –

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் மாலை தனது டுவிட்டர் படத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பேசியுள்ளார்.
அதில், கொரோனா விவகாரத்தில் இத்தாலி உதாசீனமாக இருந்ததால் தற்போது ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். நாமும் அதுபோல் உதாசீனப்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது நிலையில் உள்ளது. அது மூன்றாவது நிலைக்குப் போய்விடக்கூடாது. கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் வரை பரவாமல் தடுத்தாலே அது மூன்றாவது நிலைக்குப் போகாமல் இருப்பதை நாம் தடுக்கலாம்.

அதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி ஒரு சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதே மாதிரி ஒரு எச்சரிக்கையை இத்தாலி நாடு இரண்டாவது ஸ்டேஜில் இருக்கும்போது மக்களை எச்சரித்தது.

ஆனால் அந்த நாட்டு மக்கள் அதை உதாசீனப்படுத்தினர். அதனால் பல ஆயிரம் மக்கள் பலியாகினர். அதே மாதிரி நிலைமை நமது இந்தியாவில் வரக்கூடாது.
ஆக எல்லாரும் 22 ஆம் தேதி இந்த சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என ரஜினிகாந்த் அந்த காணொளிப் பதிவில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version