Home Hot News மலேசியாவில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழகப் பிரஜைகள் தாயகம் திரும்பினர்

மலேசியாவில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழகப் பிரஜைகள் தாயகம் திரும்பினர்

mic

கோலாலம்பூர், மார்ச் 23-

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டுப் பிரஜைகள் நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் இரண்டாவது முனையத்திலிருந்து தாயகம் திரும்பினர்.

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து மலேசிய அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பிறப்பித்ததன் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் சிரமத்தை எதிர்நோக்கினர்.

இன்று இரவு 8.45 மணியளவில் தமிழகப் பிரஜைகள் தமிழகம் புறப்பட்டனர்.

அவர்களை மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ மு.சரவணன் ,மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீ மிருதுல் குமார் மூவரும் வழியனுப்பி வைத்தனர்.

இது குறித்து கருத்துரைத்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், தமிழகப் பிரஜைகள் கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் தாயகத்திற்குச் செல்ல முடியாமல் அவதியுற்று வந்ததை நான் அறிவேன்.

அவர்களை அவர்களின் தாயகத்திற்கு அனுப்புவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் இந்தியத் தூதரகம் மூலமாகவும் அரசாங்கத்தின் மூலமாகவும் ஏற்பாடு செய்ததன் காரணமாக அவர்கள் நேற்று தாயகம் புறப்பட்டனர்.

அதேபோன்று தமிழகம், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் இருக்கும் மலேசிய இந்தியர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று இரவு 11 மணியளவில் ஏர் ஆசியா விமானம் மேற்கண்ட இரண்டு இடங்களுக்கும் சென்று நம் சகோதர – சகோதரிகளை அழைத்து வந்துள்ளது என்றார் அவர்.

                                                                                              எம்.எஸ். மணியம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version