Home Hot News சில நல்ல செய்திகள் – MCO தொடங்கியதிலிருந்து குற்றங்கள் குறைந்துள்ளன -டத்தோ...

சில நல்ல செய்திகள் – MCO தொடங்கியதிலிருந்து குற்றங்கள் குறைந்துள்ளன -டத்தோ ஶ்ரீ மஸ்லான் லாஜிம்

கோலாலம்பூர்:
மக்கள் நடமாட்ட தடை (MCO) தொடங்கியதிலிருந்து நகரத்தில் பூஜ்ய விழுக்காட்டு திருட்டுகள் என்றும், குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் இல்லாததும் இதற்கு முக்கிய காரணமாகும். மேலும் மோட்டார் சைக்கிள் திருட்டுகளின் எண்ணிக்கையும் அதிகளவில் குறைந்திருக்கின்றன என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மஸ்லான் லாஜிம் தெரிவித்தார்.

எம்.சி.ஓ தொடங்கியதிலிருந்து நகர்புறம் மற்றும் புத்ராஜெயாவைச் சுற்றி 51 சோதனைகளை நாங்கள் நடத்தியுள்ளோம், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று அவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) பசார் போரோங் கோலாலம்பூருக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.
MCO ஐ அமல்படுத்த மொத்தம் 3,127 காவல்துறை பணியாளர்கள் மற்றும் 420 ஆயுதப்படை வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மக்கள் MCO உடன் இணங்குவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். இதுவரை, இணக்க நிலை கிட்டத்தட்ட 90% விழுக்காட்டினை எட்டியுள்ளது. இது 95% விழுக்காட்டினை எட்டும் என்று நாங்கள் நம்புகிறோம், என்று அவர் கூறினார்.

லெம்போ பந்தாய், கெப்போங் மற்றும் தித்திவாங்சா உள்ளிட்ட கோவிட் -19 க்கான சிவப்பு பகுதிகளாக அறிவிக்கப்படிருக்கின்றன. அந்த பகுதியில் சாலைத் தடைகள் மற்றும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்வார்கள்.

மக்கள் தங்கள் பயணங்களை குறைந்து கொண்டு வீட்டிலேயே இருக்கவும் நாங்கள் அறிவுறுத்துகிறோம். அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டுக்கான அவர்களின் பயணங்களை மேற்கொள்ளுமாறு மஸ்லான் கேட்டுக் கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version