Home Hot News குழந்தைக்குக் கொரோனா பெயரா!

குழந்தைக்குக் கொரோனா பெயரா!

கோலாலம்பூர், மாரச் 26-

சில நேரங்களில் மக்கள் விசித்திரமானவர்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு பல செய்திகள் இருக்கின்றன. ஒரு சமயம் நண்பர் ஒருவர் புதிய டோயோட்டா ரகக் கார் ஒன்றை வாங்கியிருந்தார்.அப்போதுதான் அந்தக்கார் அறிமுகமாகியிருந்த நேரம்.

தன் அண்டை வீட்டுக்காரப் பெண்ணுக்குப் பிரசவ வலிஏற்பட்டதும் இந்தக்காரின் உதவியைத்தான் அவர்கள் நாடினார்கள்.

எதற்கு உதவாவிட்டாலும் பிரசவத்திற்கு உதவ வேண்டிய கடமை இருக்கிறது.

கார் வாங்கி ஆறுமாதம் கூட ஆகவில்லை. பிரசவம் என்றதும் மனம் சங்கடப்பட்டது. காரா அல்லது உயிரா என்று யோசித்ததும் உயிர் தான் முதலில் என்ற முடிவில் காரைக் கிளப்பியிருக்கிறார். வழியிலேயே குழந்தை பிறந்துவிட்டது.

தாயும் சேயும் நலம் என்ற செய்திக்குப்பின் ஒருநாள் குழந்தைக்கு என்ன பெயர் என்று கேட்டிருக்கிறார். அதற்கான பதில் டோயோட்டா என்றதும் அதிர்ந்துபோயிருக்கிறார்.

இதுபோலவே நிறைய இருக்கின்றன. நல்ல நிகழ்சிகளில், அதன் தொடர்பில் பெயர் வைப்பது பரவலாக நடந்தே வருகிறது. அந்த வகையில் கொரோனா என்று பெயர் வைத்திருப்பதாக ஒரு செய்தி.

இப்பெயர் வைப்பு பிலிப்பைன் நாட்டில் நடந்திருக்கிறது.

பிறந்த குழந்தைக்கு கொரோனா என்று பெயர் வைதிருக்கிறர்களாம். நல்லவற்றையோ, ஓர் அதிசயத்தையோ குறிப்பிடும் வகையில் பெயர் வைத்திருந்தால் அது பயனான நினைவூட்டலாக இருக்கும்.

கொரோனா என்று பெயர் வைத்திருப்பதால் அக்குழந்தை கிருமித்தொற்றை உணர்த்தாதா என்ற ஐயமும் எழத்தானே செய்யும்.

இனி வைரஸ் என்றும் பெயர் வைக்கலாம். சீனாவில் புதிய வைரஸ் தாக்கியிருப்பதாக ஒரு செய்தி. இப்புதிய கிருமிக்கு ஹண்டா என்று பெயர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கார்களுக்கான எண்பட்டை போல இப்பெயருக்கும் ஏதாவது ஒரு விலை இருக்குமோ?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version