Home Hot News மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு மீறப்படுகிறதா?

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு மீறப்படுகிறதா?

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு மீறப்படுகிறதா?

கோலாலம்பூர், மார்ச் 27-

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு நடடிக்கை ஒன்பதவது நாளை எட்டிவிட்டது. மக்கள் நடமாட்டச் சட்டத்தைப் புரிந்துகொள்ளாமல், சட்டத்தை மீறியவர்கள் சட்டத்தின் பிடியில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்களில் ஒருபெண்ணும் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவரோடு பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் 15 பேர் கைதாகி இருக்கின்றனர்.

இதுபோலவே கோலசிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா ஆகிய இடங்களிலும் உத்தரவை மீறியதற்காக எழுவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கெடாவில் 11பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சரவாக்கில் 24பேரும் 4 பெண்களுமாக 28 பேரும் இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையை மிறி இருக்கின்றனர்.

வீட்டில் இருங்கள் என்பதன் அர்த்தம் புரியாமலும் அதன் தீவிரத்தன்மை அறியாமலும் வெளி நடமாட்டத்தில் இருந்ததற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் இவர்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறியிருக்கிறார்.

முதல் வாரத்தில் மென்மைத் தன்மையுடன் அணுகு முறையைக் காவல்துறையினர் கடைப்பிடித்தனர். இரண்டாவது வாரத்தில் வெளி நடமாட்டம் கட்டுப்படவில்லை என்பதால் நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டிய அவசியம் ஏறபட்டிருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version