Home Hot News பரிவு மிக்க மக்களின் பசிபோக்கும் சேவைககள்

பரிவு மிக்க மக்களின் பசிபோக்கும் சேவைககள்

பசிபோக்கும் சேவைககள்

ஜியார்ஜ் டவுன் , மார்ச் 28-

பொருளாதாரம் இல்லாத நிலையில் மக்களுக்கு உதவுவது இறைச்சேவை என்று கருதப்படுக்கிறது. இன்றைய நிலையில் கூடுதல் உதவியை வழங்க வேண்டிய கடப்பாடு அனைத்து தரப்பினருக்கும் இருக்கிறது

கொரோனா பாதிப்பால் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டில் விட்டிலேயே இருக்க வேண்டும் என்பதால் வசதியற்றவர்கள் பெரும் பாதிப்புக்கு அளாகிவருகின்றனர்.

வசதியற்ற மக்களுக்கான உணவுத்தேவை முதலில் களையப்படவேண்டும் என்பதை உணர்ந்து, மலேசிய இந்து சங்கம் பினாங்கு வட்டாரப்பேரவையின் சமூக நலப்பிரிவு 130க்கும் அதிகமான குடும்பங்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கான பொருட்களை வழங்கி உதவினர்.

சிம்பாங் அம்பாட், தாமான் மேரா, ஜுரு மக்களுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டிக்கின்றன என்று மாநிலப் பேரவையின் தலைவர் மா.முனியாண்டி தெரிவித்துள்ளார்.

பினாங்கு மாநிலத்தில் இதுபோன்ற உதவிகள் தேவைப்படுவோர் பினாங்கு மாநில இந்து சங்கத்தின் சமூக நலப்பிரிவை தொடர்புகொள்ளுமாறு சமூக நலப்பிரிவுத்தலைவர் தொண்டர்மணி முனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Previous articleநவீன கருவிகள் வாங்க சுகாதாரத் துறைக்கு வெ.15 லட்சம்
Next articleபண்டார் சன்வே ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் மனிதாபிமான உதவி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version