Home Uncategorized ஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்?

ஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்?

ஸ்மார்ட்போன் சாதனங்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய சாதனமாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் ஒருநாளில் பலமுறை நம் உடலில் தொடுகிறது. மேலும் ஸ்மார்ட்போன்களில் அதிக கிருமிகள் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு எளிதில் பரவி வரும் நிலையில், ஸ்மார்ட்போன் மூலம் அது பரவும் அபாயமும் அதிகமே. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் என தெரியுமா?

உலக சுகாதார மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், 2003 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட சார்ச்-கோவ் வைரஸ் கிளாஸ் மீது 96 மணி நேரங்கள் அதாவது நான்கு நாட்களுக்கு உயிர்வாழும் என கண்டறியப்பட்டது. கிளாஸ் தவி கடுமையான பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீது 72 மணி நேரங்களுக்கு உயிர்வாழும் என கண்டறியப்பட்டது.

ஆரோக்கியத்திற்கான தேசிய மையம் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தற்போதைய கொரோனா வைரஸ் ஸ்டீல் மற்றும் கடுமையான பிளாஸ்டிக் மீது 72 மணி நேரங்கள் அதாவது மூன்று நாட்களுக்கு உயிர்வாழும் என தெரியவந்துள்ளது. மேலும் கார்டுபோர்டின் மீது 24 மணி நேரத்திற்கும், பித்தளையின் மீது 4 மணி நேரத்திற்கு உயிர்வாழும் என தெரிவிக்கப்பச்சுள்ளது. சமீபத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் கிளாஸ் மீது எவ்வளவு காலம் உயிர்வாழும் என கண்டறியப்படவில்லை.

எனினும், 2003 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக சுகாதார மையம் மற்றும் ஆரோக்கியத்துக்கான தேசிய அமைப்பு ஆய்வு முடவுகளின் படி கிளாஸ் மீது கொரோனா வைரஸ் 96 மணி நேரம் அதாவது நான்கு நாட்களுக்கு உயிர்வாழும் என கருத முடியும். ஆய்வின் படி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி அனைத்துவித கிளாஸ் பரப்புக்கும் பொருந்தும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version