Home Hot News கோவிட்- 19 தாக்கம் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு – போலீசார் தகவல்

கோவிட்- 19 தாக்கம் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு – போலீசார் தகவல்

கோலாலம்பூர் (பெர்னாமா): கோவிட் -19  நோய்த்தொற்று சங்கிலி தொடரில்  தப்ளிக் சமய மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் சேர்த்து 40,000 பேர் வரை  பாதிக்கப்பட்டுள்ளனர் என்று  போலீசார்   இன்று தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை (ஏப்ரல் 4)  ஐஜிபி  அப்துல் ஹமீத் படோர் (படம்) புக்கிட் அமான் சிஐடி தலைவர் ஹுசிர் முகமது தலைமையிலான குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) பணிக்குழுவினால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின்  தகவல்  பகுப்பாய்வு செய்யப்பட்டதாகக் கூறினார்

சுகாதார அமைச்சகம் வழங்கிய தகவல்களிலிருந்து  கோவிட் -19 தொற்று சோதனைக்கு  சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள் செல்ல வேண்டிய பல பகுதிகளை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது என்றார்.

அண்மையில் ஸ்ரீ பெட்டாலிங் மசூதி சமய நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட சுமார் 11,000  தப்ளிக் உறுப்பினர்களை அடையாளம் காண அமைச்சகத்திற்கு உதவுவதன் மூலம்  தகவல்களை பகுப்பாய்வு செய்தோம்.

“இந்தத் தகவலிருந்து  நெருக்கமான தொடர்புகள், பயணம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களால் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆகியோரை அடையாளம் காண குழு குறிப்பிட்ட முறைகளைச் பயன்படுத்தியது என்றார்.

“கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய  நபர்களின் குறிப்புகளை  அமைச்சகம்  வழங்குங்கியிருக்கிறது,  உதாரணமாக அவர்களின் வீட்டு முகவரிகள், தொலைபேசி எண்கள் மற்றும் அடையாள அட்டை எண்கள் போன்ற முழுமையான தகவல்களைப் பெறுவது உட்பட சம்பந்தப்பட்ட நபர்களை நாங்கள் அடையாளம் கண்டோம்,” என்று ஹமீத் கூறினார்.

தப்ளிக் பங்கேற்பாளர்கள்  பலர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை விமர்சிக்கவோ அல்லது பாகுபாடு காட்டவோ கூடாது என்று பொதுமக்களை வலியுறுத்தினார்.

வெளிநாட்டில் இருக்கும் தப்ளிக் பங்கேற்பாளர்கள்  பற்றிய தகவல்களையும் பெற குழு முயற்சிப்பதாகவும், அவர்கள் திரும்பி வந்தவுடன் தேவையான நடவடிக்கை எடுக்க குடிநுழைவுவில்  அவர்கள் பற்றிய விவரங்கள் வழங்கப்படும் என்றும் ஹமீத் கூறினார்.

தப்ளிக் குழுவினர் குறித்த  முழு  தகவல்களையும் பெற குழு முயற்சிக்கிறது என்று ஹமீத் கூறினார். இது அவர்களின் வருகையை உறுதிப்படுத்துவதாகும். இதன் மூலம் கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தலுக்கான மையத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல காவல்துறை தேவையான நடவடிக்கை எடுக்கும்.

இதற்கு முன்னர், ஸ்ரீ பெட்டாலிங்கில் நடந்த தப்ளிக் கூட்டத்தில் பங்கேற்ற சுமார் 11,000 பங்கேற்பாளர்களில் 95% பேர் கோவிட் -19 சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

Previous articleஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா சிவப்பு வளையத்திற்குள் ஜெரண்டூட்
Next articleவாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி – நான் மறந்த என் முதல் பிறந்தநாள்: டத்தோ ரகுமூர்த்தி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version