Home இந்தியா ஒற்றுமை சிலை ரூ.3,000 கோடிக்கு விற்பனை விளம்பரம் கொடுத்தவர் கைது

ஒற்றுமை சிலை ரூ.3,000 கோடிக்கு விற்பனை விளம்பரம் கொடுத்தவர் கைது

கொரோனாவுக்கு நன்கொடை: ஒற்றுமை சிலை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பனை விளம்பரம் கொடுத்தவர் கைது

அகமதாபாத், ஏப்ரல் 6-

குஜராத் மாநிலம், கெவாடியாவில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் படேல் ஒற்றுமை சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 989 கோடி ரூபாய் மதிப்பில் இந்தச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனைகள் கட்டவும், மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளுக்கான செலவை ஈடுகட்டுவதற்காகவும், சுகாதார உபகரணங்கள் வாங்குவதற்காகவும் இந்த சிலை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக ஓஎல்எக்ஸ் வலைதளத்தில் ஒருவர் கடந்த சனிக்கிழமை விளம்பரம் செய்துள்ளார்.

இதுகுறித்து செய்தித்தாள்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து விளம்பரம் செய்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து குஜராத் போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விளம்பரத்தை தனது தளத்தில் இருந்து ஓஎல்எக்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version