Home Hot News மண்ணின் விளைச்சல் மக்களுக்காக

மண்ணின் விளைச்சல் மக்களுக்காக

சபா, ஏப்ரல் 6-

கோவிட் 19 தொற்று ஒரு தண்டனையாக பல குடும்பங்களைப் புரட்டிப்போட்டிருக்கிறது. உண்ணுதற்கு உணவு இல்லை, அதை விட மக்கள் நடமாட்ட இய்க்க கட்டுப்பாடு வருமானம் இழந்து பல ஒற்றைப்படை வேலை இழந்தவர்கள், வேதனையில் மூழ்கத்தொடங்கினர்.

எவ்வாறாயினும், இந்த நிலைமை மாறவேண்டும். இதற்கு சபாவின் பெனாம்பாங்கில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்களின் நடவடிக்கை ஓர் உதாரணமாக அமைந்திருக்கிறது.

மனிதகுலம் துன்பத்தை ஒதுக்கிவைக்கவேண்டும் என்றும் பிரகாசத்தை உணரவும் அவர்கள் யாரும் பட்டினி கிடக்கக்கூடாது என்ற உறுதி செய்வதற்காக பொதுமக்களுக்கு இலவச காய்கறிகளையும் பழங்களையும் வழங்க முன்வந்திருக்கின்றனர்.

காய்கறிகளும் பழங்களும் தங்கள் வீடுகளுக்கு வெளியே வைக்கப்படுகின்றன, தேவைப்படும் எவருக்கும் இதில் தடையில்லை. அவற்றை எடுத்துச் செல்லலாம்.

பசி என்பதற்குரிய பரிகாரம் இது. இது தொடரும். மனுக்குலம் வாழ உதமுடிந்திருக்கிறதே. இறைவனுக்கு நன்றி என்கிறது அடையாளம் காட்டாத குழு.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version