Home Hot News உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது.

ஜெனீவா,ஏப்ரல் 07-

சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் செய்வது அறியாமல் உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 13 லட்சத்தை  தாண்டியுள்ளது. இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும்3.67 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பலி எண்ணிக்கை 10,871 ஆக உள்ளது.

ஸ்பெயினில் 136,675பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 13,341 ஆக உள்ளது.  இத்தாலியில் 132,547 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 16,523- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Previous articleஎம்சிஓ அமலாக்க காலகட்டத்தில் சத்தான உணவு முறை அவசியம்
Next articleMalaysia dan Singapura bekerja pada keadaan baru

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version