Home உலகம் Covid-19: அரசியல் செய்ய வேண்டாம் டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

Covid-19: அரசியல் செய்ய வேண்டாம் டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என டொனால்டு டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு தலைவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஜெனீவா, ஏப்ரல் 09-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப்போகிறோம் என கூறி இருந்தார்.

சுகாதார அமைப்பின் தலைவர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எழுப்பிய விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளித்து உள்ளார்.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது:-

தயவுசெய்து இந்த கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். இது உலக அளவில் உங்களிடம் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது.

தயவுசெய்து கொரோனாவை அரசியல்மயமாக்குவதைத் தவிர்த்திடுங்கள். இந்த ஆபத்தான வைரஸைத் தோற்கடிக்க நாட்டின் ஒற்றுமை மிக முக்கியமானதாக இருக்கும்.

நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். நாங்கள் இரவும் பகலும் உயிர்களைக் காப்பாற்ற தொடர்ந்து பணி புரிந்து வருகிறோம் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

கொரோனா வைரஸ் போன்ற ஒரு புதிய மற்றும் தீவிரமான நோயை எதிர்கொள்ளும்போது இந்த அமைப்பு ஒரு நடவடிக்கைக்குப் பிறகு மதிப்பீடு செய்கிறது. பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காண எங்கள் மதிப்பீட்டை நாங்கள் செய்கிறோம் உலக சுகாதார அமைப்பு தொற்றுநோயிலிருந்து உயிர் இழப்பு குறைப்புகளைக் கற்றுக்கொள்ள விரும்புகிறது என கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version