Home இந்தியா இந்தியாவில் இருந்து சொந்தநாட்டிற்கு திரும்ப விரும்பாத அமெரிக்கர்கள்

இந்தியாவில் இருந்து சொந்தநாட்டிற்கு திரும்ப விரும்பாத அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவில் இருந்து சொந்தநாட்டிற்கு திரும்ப அமெரிக்கர்கள் விரும்பவில்லை.
புதுடெல்லி,ஏப்ரல் 13- 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 444 பேர் வார இறுதியில் புதுடெல்லியில் இருந்து மெல்போர்னுக்கு சிறப்பு விமானத்தில் சென்று உள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்காவிற்கு செல்ல இங்குள்ள அமெரிக்கர்கள் விரும்பவில்லை.
இந்த வார தொடக்கத்தில், இங்குள்ள அமெரிக்கர்களை சொந்த நாட்டிற்கு  அழைத்துச் செல்ல அமெரிக்க வெளியுறவுத்துறை சிறப்பு விமானங்களை இயக்கி வந்தாலும், பல அமெரிக்க பிரஜைகள் இந்தியாவில் தங்க விரும்புகிறார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50,000 க்கும் மேற்பட்டவர்களை திரும்ப அழைத்துச் சென்றதாக டுவீட் செய்துள்ளார்.
ஆனால் அமெரிக்கா செல்வதில் இருந்து அமெரிக்கர்கள்  பின்வாங்க விரும்புகிறார்கள். இந்த வார தொடக்கத்தில் வாஷிங்டன் டி.சி.யில் பத்திரிகையாளர்களுடனான  சந்திப்பில்அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இயன் பிரவுன்லீ, “இந்தியாவில் ஒரு விமானத்தில் வர அழைப்பு விடுத்தபோது எங்களிடம் பல ஆயிரம் பேர் இருந்தனர், ஆனால் இந்த வார இறுதியில், 800 பேர் மட்டும் உள்ளனர். பலர் அமெரிக்காவருவதில் பின்வாங்கி விட்டனர் இந்தியாவில் இன்னும் 24,000 அமெரிக்க பிரஜைகளை உள்ளனர் அவர்களளை கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
வெளியுறவுத்துறையின் கூடுதல் செயலாளரும், கொரோனா ஊடகசெய்ச்தி பொறுப்பாளருமான தாமு ரவி கூறும் போது  இந்தியாவில் இருந்து 20,473 வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப வெளியுறவுத்துறை வசதி செய்துள்ளது.
அமிர்தசரஸ், புதுடெல்லி, மும்பை, கோவா, சென்னை, ஐதராபாத், கொச்சி, பெங்களூரு, அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவிலிருந்து இந்த வாரம் மேலும் 12  விமானங்களை இயக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த முதல் சுற்று விமானங்களில், இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட 35,000 இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களில் 20,000 பேர் திரும்பி செல்ல விரும்பினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version