Home மலேசியா கோவிட் 19 நெருக்கடியிலும் அரிசி விலை நிலைநிறுத்தப்படுகிறது

கோவிட் 19 நெருக்கடியிலும் அரிசி விலை நிலைநிறுத்தப்படுகிறது

கோலாலம்பூர், ஏப்.23-

கோவிட் -19 க்கு எதிராகப் நாடு போராடிக்கொண்டிருக்கிறது. இக்கட்டான இந்நேரத்தில் தேசிய அரிசி வாரியம் (பெர்னாஸ்) விலை நிலைத்தன்மையையும், அரிசி கையிருப்பு விநியோகத்தையும் உறுதி செய்யும்.

தொற்றுநோய் காரணமாக உலகச் சந்தையில் அரிசியின் விலை உயர்ந்துள்ள நிலையில், இங்குள்ள பொருட்களின் சந்தை விலை நிலையானதாகவும், மலிவு விலையிலும் இருப்பதை உறுதி செய்வதற்கும் உறுதிபடுத்துவதற்கும் பெர்னாஸ் உறுதிபூண்டுள்ளது என்று தேசிய உணவு தானிய மேலாண்மை நிறுவனம் ஓர்அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேளாண்மை உணவுத் துறை அமைச்சகம் , பிற தொடர்புடைய அமைச்சகங்கள் கூறியுள்ளபடி, நாட்டில் உணவுப் பாதுகாப்பு வழங்கல் கட்டுப்பாட்டில் உள்ளன. மலேசியர்களின் பிரதான உணவு எளிதில் கிடைக்கிறது, மேலும் கோவிட் -19 தொற்றுக்கு முன்னர் இருந்ததைப் போலவே அரிசியின் சில்லறை விலையும் உள்ளது, என்று பெர்னாஸ் தெரிவித்திருக்கிறது..

உள்ளூர் வெள்ளை அரிசி, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி ஆகியவற்றிற்கான மொத்த விற்பனையாளர்களுக்கான விலைகளை அது பராமரித்து வருவதாகவும் அது கூறியது.
சந்தை விலையின் நிலைத்தன்மையை பராமரிக்க அரிசி அல்லது செயல்பாடுகளின் கூடுதல் செலவை தாங்கிக்கொள்வதாகவும் பெர்னாஸ் குறிப்பிட்டிருக்கிறது..

மலாய் பொருளாதார நடவடிக்கை கவுன்சில் (எம்.டி.இ.எம்) மேற்கோள் காட்டிய ஓர் அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக இது கூறியது, அரிசி மில் உரிமையாளர்கள் மொத்த விற்பனையாளர்கள் , அரிசி இறக்குமதி மூலம் கட்டுப்படுத்துவதாக புகார் கூறுகின்றனர்.

அரிசி இறக்குமதிக்கு மானியம் கிடைத்ததாகவும், அத்தகைய இறக்குமதிகள் வேளாண்மை உணவுத்துறைக்குச் சாதகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version