Home Hot News செலாயாங் சந்தையை ராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்தது

செலாயாங் சந்தையை ராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்தது

கோலாலம்பூர்:  நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செலாயாங் சந்தைக்குள் ஊடுருவிய ரொஹிங்கிய அகதிகளை அரச மலேசிய ராணுவப் படையினர் இன்று அப்பகுதியிலிருந்து விரட்டினர்.

செலாயாங் சந்தையின் வர்த்தகத்தை சில ஆண்டுகளாக தங்கள் வசம் வைத்திருந்த ரொஹிங்கியர்கள் மலேசியர்களுக்கு பல்வேறான மிரட்டல்களை ஏற்படுத்தி வந்தனர். அகதிகள் என்பதால் சந்தை வர்த்தகத்தை முழுமையாக அவர்கள் எடுத்துக் கொள்ள முடியாது.

எனினும் அவர்கள் ஊழலுக்கு அடிபணியும் அதிகாரிகளைக் கொண்டு காரியம் சாதித்து சந்தையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்தனர். இந்நிலையில் மார்ச் 18ஆம் தேதி முதல் அமலாக்கத்திற்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாட்டை இவர்கள் தொடர்ந்து மீறி வந்தனர்.

மலாய்க்காரர்களுக்கு எதிராக இவர்கள் அவதூறு நிறைந்த காணொளிகளையும் பரப்பி வந்தனர். மேலும் இவர்கள் செலாயாங் சந்தைக்குள் ஊடுருவினர். அங்கிருந்த சாலைத் தடுப்புகளையும் உடைத்தெறிந்தனர். இதனால் இப்பகுத்திக்கு விரைந்த ராணுவம் இவர்களை அங்கிருந்து விரட்டி செலாயாங் சந்தையை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version